பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் ஆன்மீக ரகசியம்.... 


பூஜை மணியின் அதிதேவதை - வாசுதேவர்.
மணியின் நாக்குக்கு அதிதேவதை - சரஸ்வதி.
அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை - சூரியன்
நாதத்துக்கு அதிபதி - ஈஸ்வரன்
ஆகவே மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதற்கு என்ன காரணம்:
வழிபாடு செய்யும் போது துர் சக்திகள் அண்டக்கூடாது என்பதற்கு தான் பூஜை மணி பயன்படுத்துகிறோம். சிவபெருமானுக்குரிய வாகனம் நந்தி பகவான். இவர்தான் கைலாயத்தின் பாதுகாவலராக திகழ்கிறார். ஒவ்வொரு சிவன் கோயில்களிலும் நந்தி பகவானை தரிசனம் செய்துவிட்டு அவரது அனுமதி பெற்ற பிறகுதான் மூலவரான சிவனை தரிசிக்க முடியும்.
சிவபூஜை நடக்கும் இடத்தை நந்தி பகவான் பாதுகாப்பதாக ஐதீகம். ஆதலால், தான் பூஜை மணியில் நந்தி பகவான் இடம் பெற்றிருக்கிறார். இதுவே விஷ்ணு கோயில்களில் பூஜை மணியில் சக்கரத்தாழ்வார் இடம் பெற்றிருப்பார்.

காண்டா மணி பூஜைக்கான மந்திரம்:
ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
காண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ் வானலாஞ்ச நம:

எப்போதும் உள்ளத்தில் தூய்மையான உணர்வு வருவதற்கும், தீய எண்ணங்கள் மறையவும், மணியை ஒலிக்கிறே என்பதுதான் இந்த மந்திரத்தின் பொருள். 
 



Leave a Comment