அக்னியை சாட்சியாக கொண்டு ஹோம பரிகார வேள்வி செய்வது ஏன்?


நவகிரகங்களிலேயே அதிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகம் சூரியன். உருவ வழிபாட்டிற்கு முன்பு சூரிய, சந்திர வழிபாட்டிற்கு பூமியில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். 

இன்றைக்கும் நம் கண்களுக்கு தெரியக்கூடிய இரு கிரகங்கள் (தெய்வங்கள் என்று கூட சொல்லலாம்) சூரியனும், சந்திரனும் மட்டுமே. பூமியில் மாதம் மும்மாரி மழை பொழிவதற்கும், விவசாயம்,  பயிர்கள் செழித்து வளர்வதற்கும் சூரியனே காரணகர்த்தா ஆகிறார். 

பூமியில் வாழும் மனிதர்கள் அடுத்த தலைமுறையை நோக்கி செல்வதற்கு ( உருவாக்குவதற்கு) சந்திரனே காரனகர்த்தா ஆகிறார்.  இராமாயண காலம் முதல் இன்றுவரை இயற்கையை முன்னிறுத்தி செய்யும் வழிபாடுகள் அனைத்தும் சூரியனை மையப்படுத்தியே நம் முன்னோர்கள் செய்துள்ளார்கள். 

சூரியனை பற்றி பேசும்பொழுது அக்னியை பற்றியும் பேசியாக வேண்டும். என்ன காரணம்? என்று ஆராய்ந்து பார்த்தோமே என்றால் சூரியனும், அக்கினியும் குணங்களில் ஒன்று பட்டவர்கள். ஆதி மனிதர்கள் சூரியனுடைய வழிபாட்டிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ!  அதற்கு நிகராக தான் செய்யும் தர்ம காரியங்களுக்கும்!! சத்தியவாக்கிற்கும்!!! அக்னியை சாட்சியாக தேர்ந்தெடுத்து  உள்ளார்கள். 

ஆகையால் தான் இன்றைக்கும் திருமணத்திற்கும், ஹோம பரிகார பூஜைகளுக்கும் அக்னியை சாட்சியாக கொண்டு திருமண வேள்வி மற்றும்  ஹோம பரிகார வேள்விகளை செய்து கொண்டிருக்கிறோம். 

இன்றைக்கும் நம் கண்களால் பார்த்து வணங்கக்கூடிய   தெய்வங்கள் சூரியன், சந்திரன் மட்டுமே.  தை திருநாளாம் பொங்கல் திருநாளை இன்றும் சூரியனுக்கான விழாவாக தான் நாம் கொண்டாடுகிறோம். இதிலிருந்து உலகம் இயங்குவதற்கு சூரியனுடைய பங்கு எந்தளவு  முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். 
 



Leave a Comment