கஷ்டங்கள் மாற எளிய பைரவர் பரிகாரங்கள்


மனிதர்களின் துன்பத்திற்குக் காரணம் அவர்களைப் பற்றியுள்ள தோஷங்களும், பாவங்களும் தான், பிதுர் தோஷம், நாகதோஷம், உள்ளிட்ட அனைத்து தோஷங்களையும் நீக்கி வாழ்வில் வளத்தைத் தருவது பைரவர் வழிபாடு. 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் , வியாபாரத் தடை, வறுமை, உள்ளிட்ட அனைத்து துன்பங்களையும் பைரவ வழிபாடு முற்றிலும் நீக்கி வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும். உங்கள் தோஷங்களை பைரவர் வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொள்வதற்கான பரிகாரங்களைப் பார்ப்போம்.. 

ஒருவரது வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் இல்லாமை, திருமணத்தடை, உள்ளிட்ட பல தடைகளும், துன்பங்களும் பிதுர் தோஷத்தால் வருவனவாகும். பிதுர்களுக்காக ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, உள்ளிட்ட நாட்களில் எள்ளும், தண்ணீர் அளித்து சிரார்த்தம் செய்வது உண்டு. சிலர் கால பைரவ ஷேத்ரமாக விளங்கும் காசிக்கு சென்று சிரார்த்தம் செய்வதும் உண்டு. 

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து, புனுகு சாற்றி, நாகலிங்கப்பூ மாலை அல்லது எலுமிச்சை மாலை அணிவித்து, எள் கலந்த அன்னம் படையலிட்டு இனிப்பு பதார்த்தங்கள், பாயாசம் படைத்து முன்னோர்களை நினைத்து, பிதுர் பூஜைக்கான மந்திரம் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின் தன்னால் இயன்ற பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி, வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுவிட முடியும். 

இதுவரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள், ராசி மற்றும் நட்சத்திரம் தெரியாதவர்கள், யார் வேண்டுமானாலும் இப்பரிகாரத்தை செய்து தோஷத்தை விலக்கிக் கொள்ளலாம். 
 



Leave a Comment