பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு, ஏற்படும் தீமை விளைவுகள் மற்றும் அதனை தீர்க்கும் வழிகள்


பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு, திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும் ,விவாக ரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்யம் இருக்காது அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது. ஒருசிலருக்கு கடுமையான உடல் உபாதை மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பல முறை திருமணம் நடக்க வாய்புண்டு  
   
 கலப்பு திருமணம்,ரகசியதிருமணம் நடக்க வாய்ப்புண்டு. இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வள்வு அதிஸ்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்த பலன்கள் இவர்கள் அடைய முடியாமல் பித்துருக்களும் பித்துரு தேவைகளும் தடை செய்கிறார்கள். பித்துருக்களின் சாபம் கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மையுடையது.
 
பித்ரு தோஷம் நீங்க பரிகாரம்
               
ராமேஸ்வரம் சென்று திலக் ஹோமம் செய்வதும். கயா சிரார்த்தம் செய்வதும். காசி, அலகாபாத்,சென்று திவசம் செய்வதும். 

திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோசத்திற்கு பரிகாரமாகும். திலக் ஹோமம் குடும்பத்தில் யாரேனும் விபத்துகளில் இறந்து இருந்தாலோ அல்லது தற்கொலை செய்துகொண்டு இறந்தால்மட்டுமே திலக் ஹோமம் செய்ய வேண்டும் அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலக் ஹோமம் செய்ய வேண்டிய தில்லை..

பாபநாசம் சென்று திலக் ஹோமம் செய்வதால் வாழ்வில் தடைபட்ட காரியங்கள் எல்லாம் நிவர்த்தியாகி எங்கும் எதிலும் வெற்றி தான் இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வற்றாத ஜீவ நதி தமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள முதல் சேத்திரம் அகத்தியர் உருவாக்கிய நவ கைலாயத்தில் சூரிய ஸ்தலம் அகத்தியர் தனது மூதாதையர்களுக்கு தீல தர்ப்பணம் செய்த ஸ்தலம்.



Leave a Comment