சந்திர கிரஹணம் - செய்ய கூடாதவை என்னென்ன ?
ஆரம்பம் இரவு- 7.8.17 - 10:52PM
முடிவு-8.8.17 00:48AM
திங்கட்கிழமை 'பகுதி' (Partial) சந்திர கிரஹணம் நம் இந்திய நாட்டில் தெரியும். இதன் பொருட்டு சில ராசியினர் தோஷ பரிகாரம் செய்து கொள்வது அவசியம். இந்த பதிவு இட முக்கிய காரணமே, சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும், இதை மிகைப்படுத்தி, மிகப்பெரும் தனி மனித சேதம் நிகழப்போவதை போன்று பல பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. அச்சம் வேண்டாம். அது போன்ற பதிவுகளில் அவர்கள் மேற்கோள் காட்டியிருப்பது, பாதிப்பை பற்றி கூறியிருப்பது, முழு சந்திர கிரகணம் எனில் மட்டுமே சாத்தியம். முக்கியமாக தோஷ பரிகாரம், மகரம், கும்பம் , கடகம், சிம்மம் ராசி-லக்கினத்தினர் கண்டிப்பாக செய்வது அவசியம். மேஷம் மற்றும் விருச்சிகம் ராசி லக்கினத்தினர் செய்து கொள்வதும் நலம் தரும். பொதுவாகவே, சந்திர கிரகணத்தின் மூலம் பாதிப்பில் இருந்து தப்ப, அந்த நேரங்களில் தூங்காமல் 'நமசிவய' மந்திரத்தை ஜெபித்து வருவதோ அல்லது மிருத்தியுஞ்சய மந்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், அல்லது ராம நாமம் ஜெபித்து வரின், மிகப்பெரிய பலன் கிட்டும். உணவு உண்பதை மாலை ஆறு மணிக்குள் செய்து விடுவது நன்று. திரவ உணவுகளின் மீதும், நீரிலும் தர்ப்பை புல் போட்டு வைக்கவும். கண்டிப்பாக இந்த நேரத்தில் உணவு அருந்துவது தவிர்க்கவேண்டும். இந்த நாள் முழுதுமே அசைவ உணவு மற்றும் வெளியிடங்களில் உணவு அருந்துவது கூடாது. நீர் நிலைகளில் நீச்சலடித்து விளையாடுவதை செவ்வாய் 8.8.17 மதியம் வரை தவிர்க்கவும்.
சமுத்திரத்தில் கிரகண காலம் முடிந்ததும் குளிக்க இருப்போர், ஏதேனும் பாத்திரத்தில் மொண்டு, கரையில் நின்று குளிக்கவும். கிரகண காலம் முடிந்து அடுத்து வரும் பதினைந்து நாட்களுக்கு மேற்கூறிய ராசியினர் குடும்பத்தாரிடம் வாக்கு வாதம் தவிர்த்து வரவும். கர்பிணி பெண்கள் வெளியே வருவதை அவசியம் தவிர்க்கவும். தோஷ பரிகாரம், மேற்கூறியபடி மந்திரம் ஜெபிப்பதும், கிரகண காலம் முடிந்ததும் குளித்து, சந்திரனை பார்த்துவிட்டு, பின் வீட்டின் பூஜையறையில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு, பின்னர் புதிதாக சமைத்த உணவை உண்ணவும்(தேவைப்படின்) .
மேற்கூறிய ராசியினர் செவ்வாயன்று 8.8.17 காலை ஒரு வெள்ளை ஜாக்கெட் துணி அல்லது அங்கவஸ்திரத்துடன், சிறிது நெல், அரிசி பாக்கெட், மட்டை தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம்,பூவுடன் சிறிது தட்சிணையும் வைத்து எவருக்கேனும் (பிச்சை புகுவோருக்கு கொடுக்கலாகாது) தானமளிக்கவும்.
முக்கிய குறிப்பு : கிரகண காலம் முடிந்ததும் குளித்து தர்ப்பணம்
செய்வது அவசியம்.
கீழ்கண்ட மந்திரத்தை கூறிவருவது அளவற்ற நற்பயனை தரும்- இந்த கிரகண நேரத்தில். (6000 முறை கூறுவது உசிதம்)
"ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரோம் சஹ் சந்த்ராய நமஹ"
Leave a Comment