யாரெல்லாம் யம தீபம் ஏற்றலாம்? யம தீபம் எங்கு எத்தனை மணிக்கு ஏற்றலாம்?


பரணி, மகம், சதையம் நக்ஷத்திரங்களில் பிறந்தவவர்கள் யம தீபம் ஏற்றுவது சிறப்பு. நக்ஷத்திர ஸூக்தத்தில் பரணி நக்ஷத்திரத்திற்க்கு யமனையும் மகத்திற்கு பித்ருக்களை அதிதேவதையாகவும் கூறப்பட்டுள்ளது. வருஷாதி நூல்களில் சதயத்திற்கு யமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது.

யமனை அதிதேவதையாக கொண்ட சனைஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள். ஆயுள் ஸ்தானத்தில் சனைஸ்வர பகவான் நீசம் அல்லது பலமிழந்தவர்கள். சூரியனும் சனைஸ்வரரும் சேர்க்கை பெற்றவர்கள்.

5. ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்ட கேதுவின் நக்ஷத்திரங்களில் அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திர சாரங்களில் நிற்க பெற்றவர்கள்.

யம தீபம் எங்கு ஏற்றலாம்?

1.மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் க்ஷேத்ரபாலகராக அமைந்து தனி சன்னதிபெற்ற யமதர்மராஜன் சன்னதி

2.தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள யமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதி

3.திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து யமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய யமன் சன்னதியில்.

4. அனைத்து சனி பரிகார ஸ்தலங்களில்.

5. அனைத்து சிவாலய சனைஸ்வரர் சன்னதிகளில்

6. யமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்

7. அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம்

8. யம தீபம் ஏற்றவேண்டிய காலம் மஹா பரணியான இன்று மாலை 5.55 முதல் 7.11 வரை.

யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம்:

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி



Leave a Comment