புரட்டாசி மாதத்தில் செல்ல வேண்டிய பெருமாள் தலங்கள்!
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தளங்களை பார்க்கலாம்.
அரங்கநாத சுவாமி கோவில்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.
சாரங்கபாணி திருக்கோவில்
சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.
மூலவர் திருக்கோலம்
இத்தல மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் போற்றப்படுகிறார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் அருளுகிறார்.
கள்ளழகர் திருக்கோவில்
108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர்.
Leave a Comment