ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு எட்டாயிரம் இலவச தரிசன டோக்கன்கள்.
திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக இன்று முதல் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சீனிவாசன் கட்டிட வளாகத்தில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கும் நாளொன்றுக்கு 8 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இலவச தரிசன அனுமதியை தேவஸ்தான நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஒரு வார காலமாக சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் பரிசோதனை அடிப்படையில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள் ஆகியவற்றை சேர்ந்த பக்தர்கள் தங்களுக்கும் இலவச தரிசனம் டோக்கன்கள் தேவை என்று கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே தேவஸ்தான நிர்வாகம் நாளைமுதல் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சீனிவாசம் கட்டிட வளாகத்தில் நாளொன்றுக்கு 8000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்களை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் விரைவில் ஆன்லைன் மூலம் இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. எனவே நாளை முதல் ஏழுமலையான் கோவில் தரிசன நேரத்தை அதிகரிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தற்போது இரவு 10 மணிக்கு ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது.ஆனால் நாளை முதல் வழக்கம் போல் இரவு 12 மணிக்கு மேல் ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.
Leave a Comment