ஏழுமலையானுக்கு கெளஸ்துப மாலை எதற்கு?
திருப்பதி திருவேங்கடவனுக்கு கெளஸ்துப மாலை அணிவிப்பதை விசேஷமாகச் சொல்கிறார்களே... கௌஸ்துப மாலை என்பது என்ன? அதன் மகிமைகள் என்னென்ன?
பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று கௌஸ்துபம் எனும் ரத்தினம். திருமாலை அலங்காரப் பிரியன் என்று போற்றுவர். அணிகலன்கள் அணிவதில் மகிழ்பவரான திருமால், கௌஸ்துபத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு, நாம் அணிவிக்க விரும்பும் மாலைகள் பல இருந்தாலும் அவர் விரும்பும் மாலைக்கு தனிச் சிறப்பு உண்டு.
கௌஸ்துப மாலையும் அப்படியே! பாற்கடலில்... நாம் விரும்பும் பொக்கிஷங்களும் உண்டு, ஒட்டுமொத்த உலகை அழிக்கும் விஷமும் இருந்தது. ஆனால், திருமால் கௌஸ்துபம் எனும் ரத்தினத்தை தேர்ந்தெடுத்தார். நாம் வாழும் உலகமும் பாற்கடல் போன்றதே. அதிலிருந்து, நம்மை உயர்த்தும் நன்னடத்தை களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். திருமாலுக்கு கௌஸ்துப மாலை அணிவிக்கப் படும்போது, இந்தக் கருத்தே நம் மனதில் பளிச்சிட வேண்டும்!
Leave a Comment