சனி பிரதோஷம் வழிபடும் மற்றும் விரத முறை
சனி பிரதோஷத்தன்று, மாலை வேளை சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களு ம் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும் இந்த நேரத்தில் வழிபாடு செய்வது சாலச்சிற ந்தது.
விரத முறை :
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங் களிலும் வரும் திரயோதசி திதியன்று காலை யில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
பிரதோஷ நேரத்தில் தேவியும் சந்திரசேகரும் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத் தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திரு முறை பாராயணத்தையும் மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசை யையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
பிரதோஷ பலன்கள் :
பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடு வதால் சுபமங்கலம், நல்லெண்ணம் நல்லருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
பிரதோஷ தின பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோ ஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக் கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெ றும். வறுமை நீங்கி செல்வம் பெருகும் மேலும் தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனை கள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களு ம் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத் தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலன் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கி ன்றன.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென் றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிர தோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக் கூடியது ஆகும்.
சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தி பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக் கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவி ப்பது நற்பலன்களை தரும்.
இந்த குறிப்புகளை நெஞ்சில் நிறுத்தி பக்தி சிரத்தையுடன், நேர்மையாகவும் உள்ளப்பூர்வ மாக சிவபெருமானை வணங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுங்கள். உங்கள் வீட்டில் இறை அருள் நிலைக்கட்டும்.
Leave a Comment