எந்த மாதம், எந்த நாளில் திருமணம் செய்யக்கூடாது? 


ஆடி,  புரட்டாசி , மாசி மாதம் தவிர மற்ற மாதங்களில் விவாகம் செய்யலாம். ஒவ்வொருவரு மாதத்தின் கடைமூன்று நாட்கள் விலக்கப்பட. வேண்டும்.

 மல மாதங்களில் திருமணம் செய்யக்கூடாது. புதன்,  வியாழன், வெள்ளி ஆகிய இரு கண்ணுள்ள கிழமைகளில் திருமணம் நடைபெற வேண்டும்.

த்விதீயை  , திருதியை, பஞ்சமி,  ஸப்தமி,  தசமி,  ஏகாதசி, த்வாதசி,  த்ரயோதசி  திதிகளில் திருமணம் செய்யலாம் மற்ற திதிகளில் திருமணம் செய்ய கூடாது. மேஷம், வ்ருச்சிகம்,  மகரம், கும்பம், அல்லாத லக்கனங்களில் திருமணம் செய்யயலாம்.

 முகூர்த்த லக்கனத்திற்கு 7 ம் இடம் கிரகம் இல்லாமல் செய்யலாம். சந்திராஷ்டமம் தினங்கள் கூடாது. திருமண நாளில் குருவும்,  சுக்கிரனும் அஸ்தமனமாக. இருக்கக்கூடாது. திருமண நாளில் குருவும்,  சுக்கிரனும் இருவருடைய ஜென்ம ராசிக்கு 6 , 8 ல் மறையக்கூடாது.



Leave a Comment