மனை தோஷம் நீக்கி சலக செல்வங்களும் தரும் வலம்புரிச்சங்கு


பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசிபோட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப் பஞ்சமே வராது.

காத்து கருப்பு சேஷ்டை உள்ள வீட்டில், பூஜை அறையில் ஒன்பது இடம்புரி சங்குகளை அடுக்கி ஒவ்வொரு சங்கினுள்ளும், ஒரு குண்டு மஞ்சள், ஒரு கருகுங்கிலிய கட்டி, ஒரு படிகாரக்கட்டி இவைகளை போட்டு தூப தீபம் காட்டி, வீட்டின் நான்கு மூளைகளிலும், நான்கு சங்குகளை புதைக்கவேண்டும். மீதம் இருக்கும் ஐந்து சங்குகளையும் வீட்டின் வாசலுக்கு நேராக கீழே புதைத்து விடலாம். இப்படி செய்தால் வீட்டில் காத்து கருப்பு சேஷ்டை அனுகாது.

வீட்டை சுற்றி எட்டு திக்கிலும் எட்டு வலம்புரிச்சங்கையும் மண்ணில் புதைத்து விட்டால் மனை தோஷம் விலகும்.

புது வீட்டின் வாசப்படிக்கு கீழ் மூன்று இடம்புரி சங்கும், வாசப்படிக்கு மேல் மூன்று வலம் புரி சங்குகளையும் வைத்து வீடு கட்டினால் மங்கள கரமான வீடாக இருக்கும்.

வீட்டின் கிணற்றிலோ அல்லது போரில் பெளர்ணமி திதி அன்று சந்திர உதயத்திற்கு பின் வலம்புரி சங்கினுள் இறைவன் படம் பொறிக்கப்பட்ட தங்க காசு அல்லது வெள்ளி காசு போட்டு சங்கில் கடல் நீரை நிரப்பிய வாழை மரத்தின் சாரை அதில் கொஞ்சம் இட்டு கங்காதேவியை மனதில் நினைத்து பூஜித்து கினற்றிலோ அல்லது போரிலோ போட்டு விட்டால் அந்த நீர் புனித தீர்த்தமாக மாறி விடும்.

மனிதர்கள் யாரேனும் இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவர்களுக்கு பச்சை பசும்பாலை வலம்புரி சங்கின் மூலம் வாயிலும், உச்சி தலையிலும் ஊற்றி வந்தால் அவர்களுக்கு ஜீவ முக்தியும், மறுபிறவி இல்லாமையும் இருக்கும்.

சுமங்களிபூஜை செய்து குறைந்தது ஐந்து சுமங்கலிகளுக்கு வலம்புரி சங்கை தானமாககொடுத்தால், பெண்கள் தீர்க சுமங்களியாகவும் ஆரோக்கியத்துடன் நல்ல பிள்ளை பேறுகளும் நிலைத்து இருக்கும்.
 



Leave a Comment