துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு


ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கி சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். 

திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும்.  இதில் தேய்பிறையில் வரும் 4வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம். 

சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும். 

அதிகாலையில் குளித்து, வாசலில் மாவிலைத் தோரணத்தைக் கட்டி, வீட்டை மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த நாள் அன்று காலையில் இருந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு. பூஜை அறையில் ஒரு சிறிய கோலம் போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை வைத்து, இலையில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.

அந்த இலையில் களிமண்ணாலான விநாயகரை வைத்து, அவரைப் பலவகை புஷ்பங்கள் மற்றும் அறுகம்புல் மாலையினால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு, அவருக்குப் பழங்களைப் படைத்து, அதனுடன் அவர் விரும்பும் மோதகம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, நெய்வேத்தியம், பாயாசம் போன்ற பலகாரங்களைச் செய்து படைக்க வேண்டும்.

விநாயகரின் பாடல்களைப் பாடி வணங்கி, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, களிமண்ணால் செய்யப் பட்ட இந்த விநாயகரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.
 



Leave a Comment