சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?
பார்வதி தேவி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து ஸ்ரீ பரமேஸ்வரவரரை கரம் பிடித்தார். த்ரிபுராசுரர்களை வதம் செய்ய சிவபெருமான் புறப்படும் போது விநாயகரை வழிபட மறந்து விட்டார். உடனே தேர்ச் சக்கரத்தை உடைய செய்தார் விநாயகர். உண்மை நிலையை உணர்ந்த சிவபெருமான் தன் ஞான த்ருஷ்டியால் உணர்ந்து விநாயகரை வழிபட்டு வெற்றி கண்டார்.
சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுங்கள். விநாயகரை வணங்கினால் வினைகள் தீரும். கணங்களின் அதிபதி ஆதலால் இவர் கணபதியாவார். விக்னங்களை போக்குபவர் விநாயகர். விநாயகருக்கு உகந்த விரதம் சதுர்த்தி விரதம்.
சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, விநாயகர் படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும்.
இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.
Leave a Comment