ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று இத்துதியைச் சொல்ல சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும்.... 


ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று இத்துதியைச் சொல்ல சகல காரியங் களிலும் வெற்றி கிட்டும்.

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: 

ஸ ஏவ புருஷஸ்ரேஷ்ட: புக்தி முக்திஞ்ச விந்ததி 

எந்த பக்தன் ஹனுமானின் இந்தக் கவசத்தைத் தரிப்பானோ, அவனே மனிதர்களுக்குள் சிறந்த வன். போகங்களையும் மோட்சத்தையும் அடைவான். அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான். (இதைப்படிப்பது கவசம் அணிவது போலாகும்)

த்ரிகாலமேக காலம் வா படேன் மாஸத்ரயம்நர: 
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ஸரிய மாப்னுயாத் 

மூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பானே யாகில், அவன் எல்லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து லட்சுமிகரமாகிறான். சகல செல்வங்களும் அவனைத் தேடி வருகிறது.

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்தவாரம் படேத்யதி 
க்ஷயா பஸ்மாரகுஷ்டாதி தாபத்ரய நிவா ரணம் 

நள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள், தீவினைகள், பாவங் கள், தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்.

அஸ்வத்தமூலேர் கவார்ஸ்தித்வா படதியர்புமான் 

அசலாமி ஸ்ரிய மாப் னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் 

ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று, இத்துதியைச் சொல்பவன் சகல காரியங் களிலும் ஜெயிப்பான். எதிரிகளை தோற்கடிப் பான்.
 



Leave a Comment