நினைப்பதை நிறைவேற்றும் ஆவணி மாத மஹாவிஷ்ணு திருவோண விரதம்
மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், திருவோண விரதம். ஸ்ரவண விரதம் என்று கூறுவார்கள். ஆனால் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் மிகவும் ஸ்பெஷல் ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகையை திருவிழாவாக கேரள மாநில மக்கள் கொண்டாடுகின்றனர் தீவிர வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.
சரி, திருவோண விரதம் என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்னவென்பதைக் காண்போம். ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்கு உரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார்.
மஹாபலியின் ஆணவத்தை அடக்கி மூன்று அடி மட்டுமே மண் கேட்டார் வாமனர். பலியும் கொடுத்தவுடன் வாமனர் பிரம்மாண்ட உருவெடுத்தார். பின்னர் மஹா பலியை மன்னித்து பாதாள லோகத்தின் சக்கரவர்த்தியாக நியமித்தார் பரமாத்மா. கேரள மக்களை அதாவது தன் மக்களை பார்க்க வருடம் ஒருமுறை பூமிக்கு வருகிறார் மஹா பலி சக்ரவர்த்தி.
அதை ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.
திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேறுடன் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று விஷ்ணு புராணம் மற்றும் சிவ புராணங்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாள் இரவே உணவு உட்கொள்ளக்கூடாது.
அதிகாலை நீராடி, ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்க வேண்டும். வீட்டில் சாளக்கிராம பூஜை செய்து வசதி உள்ளவர்கள் முடிந்தால் ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை போலவே கலசம் வைத்து ஸத் ப்ராம்மண போஜனம் செய்யலாம் தான தர்மங்கள் செய்ய ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளால் அளவில்லாத புகழ் கல்வி செல்வம் சந்தோஷம் என எல்லாம் கிடைக்கும்.
காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக்கொண்டு, பெருமாளைக் குறித்த பாடல்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் விஷ்ணு சூக்தம் நாராயண சூக்தம் பாராயணம் செய்தல் பாகவத புராணம் படித்தல் ஸ்ரீராமாயணம் படித்தல் வேண்டும். மாலையில், சந்திர தரிசனம் காண வேண்டும். இதனால், சந்திரதோஷம் இருந்தால் விலகிவிடும். இன்று செய்த தான தர்மங்கள் மற்றும் பூஜையின் பலன்களை ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கு அற்பணம் செய்ய வேண்டும்.
ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை மேற்கொண்டால் நிச்சயம் உங்கள் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாக்ஷம் மற்றும் சுபிக்ஷம் மற்றும் அளவில்லாத செல்வம் குடிகொள்ளும்.
Leave a Comment