பழனி முருகபெருமான் சிலை ரகசியம்.... 9 வருடங்கள் எடுத்துக் கொண்ட போகர்


பழனி முருகபெருமான் சிலையை செய்ய போகர் எடுத்துக் கொண்ட நாட்கள் ஒன்பது வருடம். அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடை ய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைக ளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

81 சித்தர்கள் இந்த நவபா ஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தார். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்ட தால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு தகவல் உண்டு. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்க ளுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார். கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடை ந்து போவதும் நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொ ண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத் தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது.  ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்தார். 
 



Leave a Comment