ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்.....குழந்தை பாக்கியம் தரும் ஆடிப்பூர வழிபாடு.....
“ஆடிபூரம் மஹாலக்ஷ்மி அம்சமான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம். ”அரங்கனுக்கே ஆளாவேன்” என்று பிறந்த ஆண்டாள் நாச்சியார் பிறந்த தினமானது, பார்வதி தேவி ருதுவான நாள். சரஸ்வதி தேவி வீணை பெற்ற தினம். இதனால் இந்த ஆடிப்பூரம் ஆனது முப்பெரும் தேவியருக்கும் மிகப்பெரிய ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது” .
” இந்த நாளில் நம்மை காக்கும் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் செய்வது நாம் நமது அம்மைக்கு ஒரு நன்றிக் கடன் செலுத்துவது ஒரு ஐதீகம். நம்மை காக்கும் தாய்க்கு இந்த நாளிலே சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் செய்து மஞ்சளால் செய்த மாலை சாற்றி அம்பாளுடைய கைகளுக்கு வளையல்கள் அணிவித்து வணங்குவது மிகப்பெரிய ஒரு பரிகாரம்”.
ஆடிபூரத்தில் அம்பாளை வணங்கினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்ற கேள்விக்கு,” குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்பாளுக்கு சாத்தப்படும் அந்த வளையல்களை பெற்றுக் கொள்வதன் மூலமாக குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் அம்பாளுக்கு அம்பாளுடைய வயிற்றிலே பச்சை பயிறு, முளை கட்டிய பச்சைப் பயிறு வைத்து பூஜை செய்திருப்பார்கள். அதனை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிடுவதன் மூலமாகவும் நமக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்” .
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Leave a Comment