ஆடி அமாவாசை....புண்ணியம் பெற சில தகவல்கள்
வாழ்வில் வசந்தம் பெற , வம்ச வ்ருத்தி ஏற்பட , முன்னோர் சாபம் போக்கிட , தந்தை இழந்தோர் , பெற்றோர் இருவரையும் இழந்தோர் அவசியம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று தர்பணம், தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம்கிட்டும்.
தர்பணம்:
ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்பணம் செய்வதே சிறந்தது. அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில் குளக்கரையில் தர்பணம் செய்வதே நன்று நீர் ஓடும் ஆறு, நதி, கடற்கரை ஆகிய இடங்களிலும் செய்வது சிறப்பானதாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று "ஆத்ம சாந்தி" வழிபாடு செய்யலாம்.
தானம் தர்மம்:
அன்று காலையில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தானம் செய்வது மிகவும் பலன் தரும்.
கோபூஜை:
பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் மூதாதையர் ஆசி் கிடைக்கும்.அன்று மதியம் வாக்கில் காகத்திற்கு அன்னம் வைத்தல் மிகவும் புண்ணியத்தை தரும்.
Leave a Comment