மாதம் தோறும் அமாவாசை வரும் போது ஆடி அமாவாசைக்கு மட்டும் தனி சிறப்பு ஏன்? 


அமாவாசை தினங்களில் நாம் நம் முன்னேர்களை வழிபடுகிறேம். அதைத் தான் நாம் பித்ரு வழிபாடு என்று அழைக்கிறோம். அதிலும் குறிப்பாக,
தை அமாவாசை
புரட்டாசி அமாவாசை
ஆடி அமாவாசை 
என தனித்துவம் இருக்கிறது.


அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?


சாதாரண அமாவாசை நாட்களில் நாம் நம் முன்னேர்களை வணங்கும் பொழுது அவர்கள் எங்கு இருக்கிருர்களோ அங்கேயே இருந்து நம்மை வாழ்த்துவார்கள். ஆனால்  இந்த மூன்று அமாவாசைகளில் தான் நம் முன்னேர்கள் நம் இல்லத்திற்கே வந்து நம்மை வாழ்த்தி மகிழ்வார்கள். 

அதற்கான அனுமதி பித்ரு உலகத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்பேற்பட்ட சக்தி வாய்ந்த ஆடி அமாவாசையை நாம் நம் இல்லத்தில் இருந்தே வழிபடலாம். இந்த ஆண்டு நதிநீர் கரைகளான, குற்றாலம், பாபநாசம், சொரிமுத்து அய்யார் திருத்தலம், காவேரி, கங்கை, யமுனா, சரஸ்வதி, இராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட சூழ்நிலை சரியாக இல்லை என்பதை நாம் அறிந்ததே. 

அதனால் அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி.நம் வீட்டில் கால் படாத இடத்தை தேர்வு செய்து,  அவ்விடத்தை சுத்தப் படுத்தி நம் முன்னேர்களை மனதார நினைத்து அவர்களை கொண்டாடி வணங்கி காசி காசி என கூறிக் கொண்டு எள்ளும் தண்ணீரையும் இறைத்து வழிபட்டபின் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு, நம் முன்னோர்கள் படத்திற்கு மாலையிட்டு மலர்தூவி அகம் மகிழ்ந்து அகல்விளக்கு ஏற்றி சாம்பிராணி கற்பூரம் ஏற்றி, அவர்களுக்கு பிடித்த பதார்த்தங்களை படையலிட்டு  முடிந்தால் கோபூஜை செய்து காகத்திற்கு அன்னமிட்டு வாழை இலையில் விரதம் முடித்து நாம் உணவருந்தினால் நம் முன் னேர்கள் பரிபூரணமாக நமது வணக்கத்தையும் வாழ்த்தையும் ஏற்று ஆசீர்வாதம் செய்வார்கள்.
 



Leave a Comment