மகிமை வாய்ந்த குமார சஷ்டி விரதம்
மகனாய் தந்தைக்கு உபதேசித்த முருகப்பெருமான், இது சரிதானோ என்று தந்தையிடமே கேட்டு முருகேஸ்வரப் பெருமானாக இறைவனாலேயே பூவுலகெங்கும் தெய்வப் புராணங்களிலும் சிறப்படையப் பெற்றார்.
தனக்கு ஆண் பிள்ளை இல்லையே என்று ஏங்குவோர்களும், ஆண் பிள்ளை இருந்தாலும் தறிகெட்டு நடக்கின்றானே; ஒழுக்கமில்லாமல் தீய குணங்களுடன் இருக்கின்றானே என்று எண்ணுவோரும் இந்த குமார சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து, முத்துக் குமாரசுவாமி என்பதாக குமார் என்ற பெயருடன் முருகன் அருளும் தலங்களில் வழிபடுவது சிறப்புடையதாகும்.
முருகனை பாலசுப்பிரமணியனாக, பாலமுருகனாக வழிபட்டு செவ்வாழை, பன்னீர் திராட்சை, பலாச்சுளை, பாதாம்பருப்பு, பசும்பால் (குறிப்பாக காராம் பசும்பால்) ஆகியவற்றிலான பஞ்சாமிர்தம் செய்து, பாலசுப்பிரமணியன், பாலமுருகன், பாலகுமரன் போன்ற பாலரூப முருக தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் தானமாக அளிப்பது விசேஷமானதாகும்.
குளி தோஷம், கண்ட வாதங்கள், கக்குவான் இருமல், போலியோ நோய்கள் போன்றவற்றிற்கும் நிவாரணம் குருவருளால் பெற்றிடலாம். குமார சஷ்டி அன்று மூன்று வேளைகளிலிம் உண்ணா நோன்பு பூணுவது சிறப்புடையது. அல்லது அவரவர் உடல் ஆரோக்ய நிலைக்கேற்ப சிலவகை உணவுகளைத் தியாகம் செய்து உண்ணா நோன்பை எவ்வகையிலேனும் கடைபிடித்திடல் நலம். இன்று ஆண் குழந்தைகளை, சிறுவர்களைக் கொண்டு அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய் போன்றவற்றை எடுத்துத் தரச் சொல்லி, அவர்கள் கைகளாலேயே, 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அன்னதானம் அளிப்பதால்,சிறுவர், சிறுமியர் முறையில் பராமரிக்காத, பரிபாலனம் செய்யாத வினைகள் தீர்வதற்கான பரிகாரங்களைப் பெற உதவிடும்.
Leave a Comment