விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவித்தால் இவ்வளவு நன்மையா?
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு துன்பங்கள் நீங்கி நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகள் கிடைக்கும். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும்.
வேலையில்லாமல் சிரமப்படுபவர்களும், நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்படுபவர்களும், சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து விரதம் இருக்கலாம். இதனால் தீராத நோய்களும் தீரும், திருமண தடை அகலும். தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவித்து அங்காரக சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் கடன் பிரச்சினை தீரும்.
திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதம் இருந்தால் நல்ல மண வாழ்க்கை அமையும்.
இழந்த உத்தியோகத்தையும் பதவியையும் கெளரவத்தையும் பெற்றுத் தருவார் விநாயகர். நம் சங்கடங்களை தீர்ப்பதால்தானே சங்கடஹரசதுர்த்தி என்கிறோம் . கேது தோஷம் உள்ளவர்கள் கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களுக்கு வந்திருக்கும் சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருக்கலாம்.
புதன் கிழமை விரதமிருந்து விநாயகர் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் பார்ப்பது புதன் ஜாதகத்தில் நீசமாக இருப்பவர்கள் கடைப்பிடித்தால் தோஷம் படிப்படியாக குறையும். மற்றும் புதன் கிரகம் புத்திக்கு அதிபதி ஆதலால் புத்திக்கூர்மை பிரகாசமாக இருக்கும்.
செவ்வாய் கிழமையன்று விரதமிருந்து விநாயகர் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் பார்ப்பது செவ்வாய் ஜாதகத்தில் நீசமாக இருப்பவர்கள் கடைப்பிடித்தால் செவ்வாயால் ஏற்படும் தோஷம் படிப்படியாக குறையும். சதய நட்சத்திரத்தில் வருவதால் இன்றைய மங்கள வார விரதமிருந்து விநாயகர் கோவிலில் மாலை நேர அபிஷேக ஆராதனைகள் பார்ப்பது செவ்வாய் பகவான் ஜாதகத்தில் நீசமாக இருப்பவர்கள் மற்றும் செவ்வாய் திசை நடப்பவர்கள் மற்றும் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் செவ்வாய் தோஷம் படிப்படியாக குறையும்.
Leave a Comment