இழந்த செலவத்தை பெற விநாயக பெருமானுக்கு இந்த பொருளில் அபிஷேகம் செய்து பாருங்க
விநாயக பெருமானுக்கு நல்லெண்ணெய் காப்பு போடுவதால் நமது துன்பங்கள் தீரும். முதலில் பச்சரிசி மாவு அபிஷேகம் செய்வதால் நாம் கடனாளி ஆகமாட்டோம். வராக்கடன் வசூல் ஆகும்.
இளநீர் அபிஷேகம் நம் மனதை அமைதிப்படுத்தும். பால் அபிஷேகம் தூய்மையையும், தயிர் அபிஷேகம் சாந்தத்தையும் தரும். கரும்புப்பால் இழந்த செல்வத்தையும், பழச்சாறு அபிஷேகம் 16 வகை ஐஸ்வர்யங்களையும் தரும்.
அதேபோல பஞ்சாமிர்தம், தேன் சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள், பன்னீர், விபூதி, பச்சை கற்பூரம் அபிஷேகம் செய்து பூர்ண அலங்காரம் செய்து அருகம்புல் மாலை வெள்ளெருக்கு மாலை அணிவித்து ஆராதனை செய்ய பலன் இரட்டிப்பாகும்.
தனியாகவோ மற்றவர்களுடன் இணைந்து கூட்டாகவும் செய்யலாம்.எந்தகோவிலிலும் தெருவில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலும் சதுர்த்தி அபிஷேகம் செய்யலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் நேரிடையாக அபிஷேக பொருள் நேரிடையாக சிரம் மேற்கொண்டு வாங்குவது பூஜையில் கலந்து கொள்வது அளவில்லாத பலனை அள்ளி தருபவர் விநாயகர்.
Leave a Comment