கல்வி செல்வம் வழங்கும் சரஸ்வதி தேவிக்கு சந்நதிகள் அமைந்துள்ள இடங்கள்....
தாடிக்கொம்பு
இத்தலம் திண்டுக்கல்-வேடசந்தூர் பாதையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சௌந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மண்டூக மகரிஷி தன் சாபம் நீங்க தவமிருந்த தலம் இது. 500 வருடங்களுக்கு முற்பட்ட கோயில். கல்வியை அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்கு சந்நதிகள் அமைந்துள்ளன. திருவோண நட்ச த்திர நாளில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகத்தோடு விசேஷ பூஜை நடக்கிறது. ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதன த்தைப் படைத்து ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.
வாணியம்பாடி
இத்தலத்தின் பெயரே வாணி என்றுதான் தொடங்குகிறது. பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், இத்தல அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளா ணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணை யேந்திய வாணி அருள்கிறாள். வேலூர் - கிருஷ் ணகிரி பாதையில் இத் தலம் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம்
யதோத்காரி பெருமாள் கோயிலின் கருவறையில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் பாதத்தின் அருகில் அமர்ந்தவாறு சரஸ்வதி காட்சி தருகிறாள், கலைமகள். காமாட்சியம்மன் ஆலயத்திலும், கச்சபேஸ்வரர் கோயிலிலும் சரஸ்வதிக்கு சந்நதிகள் உள்ளன. காமாட்சியம்மன் கோயிலில் எண் கரங்கள் கொண்ட சரஸ்வதியைக் காணலாம். சின்ன காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேசிகன் ஸ்வாமி சந்நதியில் லட்சுமி ஹயக்ரீவர் சேவை சாதிக்கிறார். அதேபோன்று வரதராஜப் பெருமாள் கோயிலிலும் ஹயக்ரீவரை சேவித்திடலாம். காஞ்சியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள கூரம் எனும் தலத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறார்.
திரிலோக்கி
கும்பகோணத்திலிருந்து பேருந்து எண் 38, திருலோக்கிவரை செல்லும். அல்லது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து சூரியனார் கோவில், கஞ்சனூர் வழியாக தனி வாகனம் வைத்துக்கொண்டும் செல்லலாம். சிவபிரானின் கருணையால் மீண்டும் உயிர்த்தெழுந்த மன்மதனும், ரதியும் ஆலிங்கன கோலத்திலும், இறைவன் ரிஷபாரூடராக எழுந்தருளியிருக்கும் கோலத்தை குரு பகவான் கைகூப்பி வணங்கி நிற்கும் அழகு காணக் கிடைக்காது. தேவாரப் பாடல் மற்றும் கருவூர்த் தேவரின் திருவிசைப்பா பதிகம் பெற்ற தலம் இது.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்திருக்கும் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் சோபனப்படிக்கு கீழே சரஸ்வதியின் திருவுருவம் அமைந்துள்ளது.
செட்டிப்புண்ணியம்
1848ம் வருடத்திய சம்பவம் இது. இத்தலத்தைச் சேர்ந்த ராவ்சாகிப் ரங்காச்சார் ஸ்வாமி எனும் பக்தர் திருவஹீந்திரபுரம் தேவநாதப் பெருமான் மீது அளவற்ற பக்தி புரிந்தார். தம் கிராமத்திற்கும் யோகஹயக்ரீவப் பெருமாளை எழுந்தருளச் செய்ய வேண்டுமென தீரா ஆவலோடு தவித்தார். திருவஹீந்திரபுரம் தேவஸ் தானத்தின் பேரில் அந்த வருடமே தேவநாதப் பெருமாளின் உற்சவ விக்ரகத்தை செட்டிப்புண்ணியத்திற்கு எழுந்தருளச் செய்தார். செட்டிப்புண்ணியம் செய்த புண்ணியமே இன்றும் இத்தலத்தில் ஹயக்ரீவர் கல்வி, கேள்வி ஞானத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
Leave a Comment