வீட்டில் செல்வம் பெருக, இந்த எளிய தெய்வ வழிபாடுகளை செய்தால் போதும்....
ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு வருகை புரிந்து அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, கிரிவலம் செல்ல வேண்டும்.
குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து , பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும். வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்து வர வேண்டும்.
ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும். இப்படி 12 மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் பலரின் பொருளாதார உயர்வு சிறிது சிறிதாக மேம்படும்.
சனிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை வேளையில் திருப்பதி வெங்கடாசலபதி புகைப்படம் வைத்து சுப்ரபாதம் ஒலிக்க விட்டு தீப தூப ஆராதனை செய்து வழிபட்டு வர வேண்டும்.
முடிந்த அளவு சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்திற்கு உங்களால் முடிந்த அளவு வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட வேண்டும். செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு அடிக்கடி செய்ய வேண்டும். பெருமாள் கோவிலில் பைரவர் இருப்பது அரிது.
அதுவும் செல்வத்திற்கு அதிபதியான பெருமாள் கோவிலில் செல்வத்தை தரும் பைரவர் இருப்பது மிகவும் அரிது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு செளந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு மிகவும் விசேஷம் வாய்ந்தது. பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமிகளில் இக்கோவில் சென்றால் மிகுந்த சிரமத்திற்கிடையில்தான் பைரவர் தரிசனம் முடியும்.
Leave a Comment