தவறி கூட இந்த நாட்களில் சுபநிகழ்வுகளைச் செய்யாதீங்க....
பிரதமை, அஷ்டமி, நவமி ஆகியவை பொதுவாகச் சொல்லப்படக் கூடிய அசுபமான திதிகள் ஆகும். இந்த நாட்களில் கண்டிப்பாக சுபநிகழ்வுகளைச் செய்யக்கூடாது. அமாவாசை நல்ல நாள் என்று சொல்லப்பட்டாலும் திருமணம் முதலான சுபநிகழ்வுகளை அந்நாளில் செய்யக்கூடாது. அமாவாசை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய திதிகள் சுபநிகழ்வுகளுக்கு உகந்தவை அல்ல என்று காலவிதானம் எனும் நூல் குறிப்பிடுகிறது.
தீதுறு நட்சத்திரங்கள்
ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யமுப்பூரம் கேட்டை
தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறில்
மாதனங்கொண்டார் தாரார் வழிநடை போனார் மீளார்
பாயினில் படுத்தார் தேறார் பாம்பின்வாய் தேரைதானே.
மேற்கண்ட பாடல் பரணி, கார்த்திகை,
திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களை தீதுறு நட்சத்திரங்கள் என்றும், பாம்பின் வாயினில் அகப்பட்ட தேரைபோல மாட்டிக் கொள்வார் என்று எச்சரிக்கை செய்கிறது. அதேநேரத்தில் இந்த 12 நட்சத்திரங்களில் மகம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களை சுபநிகழ்வுகள் நடத்துவதில் ஏற்றுக் கொள்கிறார்கள். மற்ற ஒன்பது நட்சத்திரங்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.
Leave a Comment