சந்திர திசை நடந்தால் இத்தனை பலன்களா?
நவகிரகங்களில் மிகவும் மத்தமான கிரகமானது சந்திரன். ஜாதக ரீதியாக ஒருவருக்கு சந்திர தசா புத்தி நடைபெறும் காலத்தில் பல்வேறு விநோதமான பலன்கள் தருகிறார். ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். சந்திர பகவான் மனோகாரகன் என்று அழைக்கப்படுவார். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கு காரகன்.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் நல்ல மன வலிமை, தைரியம் துணிவு உண்டாகும். சந்திரனின் திசை ஒருவருக்கு எப்படி இருக்கும் என்று பார்த்தால் சந்திரன் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்று திசை நடத்தினால் சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவ பதவிகள் வரும் சூழ்நிலை என்று பல்வேறு நற்பலன்கள் உண்டாகும்.
ஜாதகத்தில் சந்திரன் 12ம் வீட்டில் இருந்தாலும் 12ம் அதிபதி சேர்க்கையோ தொடர்போ உண்டாகி இருந்தால் வெளிநாடு பயணம், பயணமும் அதன் சார்ந்த விஷயங்கள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். சந்திரன் நீசம் பெற்றோ, பகை பெற்றோ அமையப் பெற்று திசை நடைபெற்றாலும் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படும் ராகு கேது சேர்க்கை பெற்று அமையப் பெற்ற திசை நடைபெற்றாலும் தண்ணீர் தொடர்பான நோய்கள், பொருளாதார நெருக்கடி, மன குழப்பம், தைரியம் இல்லாத நிலை உண்டாகும்.
குறிப்பாக சந்திரனுடன் கேது சேர்க்கை பெற்று இருந்தால் மன குழப்பம் மட்டும் இன்றி பைத்தியம் பிடிக்கும் நிலை கூட உண்டாகலாம். ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர திசை பிறக்கும் போதே நடக்கும். பொதுவாக சந்திர திசை பிறக்கும் போது நடைபெற்று சந்திரன் மற்றும் 4ம் பாவம் பாதிக்கப்பட்டு இருந்தால் தாய்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.
Leave a Comment