பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களையும் ஸ்ரீ  வாராஹி தேவி.


மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராஹி தேவி. ஸ்ரீ வாராஹியின் பனிரண்டு பெயர்களைச் சொன்னாலே அம்பிகை ஸகல கார்ய சித்தியும், அளவற்ற அருளையும் அருளுவாள்.

1. பஞ்சமீ 
2. தண்டநாதா 
3. ஸங்கேதா 
4. ஸமயேஸ்வரி 
5. ஸமயஸங்கேதா 
6. வாராஹி 
7. போத்ரிணி 
8. சிவா 
9.வார்த்தாளி 
10. மஹாசேனா 
11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 
12. அரிக்னி

ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்து முடித்தபின் தான் ஆவரண பூஜை பூர்த்தியாகும்.

பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா போற்றுகின்றது. சாரதா (புரட்டாசி) நவராத்திரி என்றால் கொலு எனும் சிறப்பு அமைப்பு கொண்டு அம்பிகையை வழிபடுவது போல, ஆஷாட நவராத்திரியில் தானியங்கள் கொண்டு பூமியில் கோலங்கள் (ரங்கோலி) இட்டு வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.

கோலம் போடுவது என்பது அம்பிகையை (லக்ஷ்மியை) மனமார வரவேற்கும் வடிவம். லக்ஷ்மியின் வருகை தினமும் நிகழ வேண்டும், நித்யம் வீட்டில் வாசம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது மரபாக இருந்து வருகின்றது.

கோலமிட்ட வீட்டில் அம்பிகை கொலுவிருப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு. எது பண்ணினாலும் பண்ணவில்லை என்றாலும் தயிர் சாதம் நைவேத்யம் மிகவும் முக்கியம். சக்ரவள்ளி கிழங்கு,  கடுமதுர பாயாசம். கடுமதுர சுக்கு போட்ட கஷாயம் நைவேத்தியம் பண்ணலாம். 

மரிக்கெளுந்து மல்லிகை கதிர் பச்சை பச்சை மஞ்சக்கிழங்கு பானாகம் உளுந்த வடை கோரைக்கிழங்குடன் ஆராதனை உத்தம் தாரையாய் தேன். மிகுதியான நெய்யுடன் சர்கரைப் பெங்கல் வென்பெங்கல். மற்றும் நெய் தீபத்துடன் மாலை 7-8 வாராகியை தோராத வட்டத்திலும் க்ரிச்சக்ரத்திலும் மது வாம் தேனில் மாமிசமான பேரிச்சம்பழத்தை ஊற வைத்து தாய் வாராஹிக்கு சாம்பிரானி தூபத்துடன் நிவேத்தனம் செய்க சந்தனமும் சந்தனாதித் தைலத்துடன் பச்சை கற்பூரமும் ஆத்தாள் வாராஹிக்கு உத்தமம். 



Leave a Comment