ஜாதகத்தில் சுக்கிரன் எங்கிருந்ததால் என்ன பலன்.....
களத்திரம், பட்டப்பேர், ஸ்திரீ வர்க்கம், தாசிதாசன், சங்கீதம், பரதநாட்டியம், பரிமள வாசனாதிகள், கப்பல், இராஜஸ்திரீ, வெள்ளி,வைரம், லட்சுமி கடாட்சம் இவைகட்கெல்லாம் சுக்கிரனே காரகர்
பரணி,பூரம், பூராடம் இவருடைய நட்ச்சித்திரம்
ரிஷபம், துலாம் இவருடைய அரண்மனை வீடுகள்
மீனம் உச்ச வீடு
கன்னி நீச வீடு
சுக்கிரன் நிலை
1 ,லக்கனத்தில் சுக்கிரன் இருந்தால் நல்லதேக வலிமை, பெண் வசீகரர், சுறுசுறுப்பு, சக்தி வழிபாடு, நல்ல களத்திரம், சாஸ்திர ஞானம்
2 ,இரண்டில் சுக்கிரன் இருந்தால் சங்கீதகலையில் ஆர்வம், கவர்ச்சிகரமான பேச்சு, நல்ல தனச்சேர்க்கை
3 , சுக்கிரன் 3- இல் இருந்தால் அற்பசுகம்,பேச்சாற்றல், எழுத்தாற்றல், நல்ல வசீகர குரல், பெண்களால் மாரகம்
4 ,நல்ல கல்வி, பெரிய வாகனம்,சுகவாசி, பெண் மூலம் ஆதயாம், தாய் வழி பாசம் நிறைந்தது
5, கலை துறையில் பணி, காதல் உணர்வு அதிகமாக இருக்கும்,எதிரிகளால் நிகழ்வுகள் அறிந்து நடத்தல்
6 ,வாழ்கை துனணவருக்கு ஆகாது, பெண்களால் வழக்கு, நீர் வியாதி, சரும நோய், சத்ரு தொல்லைகள்
7 ,காமுகன், களத்திர தோஷம், குடும்ப பிரச்னை, நல்ல வருமானம்,
8 ,தீர்க ஆயுள், தாமத திருமணம், பாலியியல் நோய், பூர்விக சொத்துச்சேர்க்கை
9, கலைத்தொழில் பயணம், நடிப்பு,பணவரவு, தந்தை வழி சொத்து பிரச்னை
10 ,பெரும் வியாபாரி ஜவளி, பேன்ஸி,வெள்ளி,வைரம், சினிமா முதலிடுகள், பைனான்சியல், வண்டி வாகனம்
11, இருதார யோகம், நல்ல நிலபுலன்கள், நகை வியாபாரம், உயர்ந்த ஆடை, இசையால் வருமானம்
12 ,வெளிநாட்டு தொடர்ப்பு ,அழகான களத்திரம், காமத்தில் அதிக ஈடுபாடு, நல்ல தூக்கம், நல்ல உணவு
Leave a Comment