பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் உரிய இடங்கள்..... 


சிவபகவானின் அவதாரங்களில் பைரவர் அவதாரமும் ஒன்று சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீ பைரவர் அவதாரமும் 64 வகைகள் உண்டு பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.

தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முனங்களில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.

ஸ்ரீ நவ பைரவர் மூர்த்தியின் பெயர்கள்: 1) அசிதாங்க பைரவர். 2)ருரு பைரவர்.3)சண்டை பைரவர்.4)குரோதன பைரவர்.5)உன்மத்த பைரவர்.6)கபாலபைரவர்.7)பிஷ்ண பைரவர்.8)சம்ஹார பைரவர்.9)சொர்ணாகர்ஷண பைரவர். ஆகிய பைரவ மூர்த்திகள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் மாலையில் சூரியபகவான் மறைவு நேரத்தில் பைரவர் தரிசனம் செய்து வழிபடவும்.

வரிசை பைரவர் பெயர் வாகனம் சக்தி வடிவம் கிரக அதிபதி கோயில்
1 அசிதாங்க பைரவர் அன்னம் பிராம்ஹி குரு விருத்தகாலர் கோயில்
2 ருரு பைரவர் ரிசபம் காமாட்சி சுக்ரன் காமட்சி கோயில்
3 சண்ட பைரவர் மயில் கௌமாரி செவ்வாய் துர்க்கை கோயில்
4 குரோதன பைரவர் கருடன் வைஷ்ணவி சனி காமாட்சி கோயில்
5 உன்மத்த பைரவர் குதிரை வராகி புதன் பீம சண்டி கோயில்
6 கபால பைரவர் கருடன் இந்திராணி சந்திரன் லாட்பசார் கோயில்
7 பீக்ஷன பைரவர் சிங்கம் சாமுண்டி கேது பூத பைரவ கோயில்
8 சம்ஹார பைரவர் நாய் சண்டிகை ராகு திரிலோசன கோயில்
 



Leave a Comment