கஷ்ட காலத்தில் இருக்கும் பெண்களுக்கு தைரியம் சொல்லும் சுந்தரகாண்டத்தின் வரிகள் ......


சுந்தரகாண்டம் படிப்பதன் நோக்கமே பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வதற்குத்தான். பிரிந்தாலும், சேர்ந்திருந்தாலும் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதையே நமக்கு வலியுறுத்துகிறது.

ராமனும், சீதையும் பிரிந்திருந்த நிலையிலும் கூட மனதாலும், நினைவாலும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக, மிகவும் பிரியமாக இருப்பது கண்டு ஆஞ்சநேயர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார்.

பெண்கள் கஷ்ட காலத்தில் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டத்தின் வரிகள் எடுத்துச் சொல்கின்றன .

 சூரியனை சுவர்ச்சலாதேவியும்,

 இந்திரனை  இந்திராணியும்,

 வசிஷ்டரை அருந்ததியும்,

 சந்திரனை ரோகிணியும்,
 
 அகத்தியரை லோபாமுத்திரையும்,

 ச்யவனரை சுகன்யாவும்,

 சத்யவானை சாவித்திரியும்,

சவுதாசனை மதயந்தியும்,

கபிலரை ஸ்ரீமதியும்,

சகரனை கேசினியும், 

நளனை தமயந்தியும், 

 அஜனை இந்துமதியும் 

பின்தொடர்வது போலவும், மனமொத்த தம்பதிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது போலவும், நானும் என் கணவனுடன் வாழ்ந்து காட்டுவேன், என்றாள்.



Leave a Comment