நவகிரகங்களில் இராகு, கேது....


12 ராசி கட்டங்களில்  இராகு, கேதுகளுக்கென்று எந்த ஒரு வீடும் சொந்தமானதல்ல. இராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கும்  ஒரு தனித்தன்மை உண்டு. தான் இருக்கும் இடத்தையே தனக்கு சொந்தமாக்கி! அதில் ஆட்சி செய்பவர்கள் தான்!!  இந்த இரு கிரகங்களும்.  

நவகிரகங்களில் அதிக பலம் வாய்ந்த கிரகம் கேது. அதற்கு அடுத்தபடியாக பலம் வாய்ந்த கிரகம் இராகு. இராஜ கிரகமான சூரியன் மற்றும் சந்திரனில் தொடங்கி மற்ற ஐந்து கிரகங்களும் இராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக தான் பலம் வாய்ந்த கிரகங்களாக ஜோதிட வல்லுந‌ர்களால் கருதப்படுகிறது. 

இலங்கை நாட்டிற்கு அதிபதியான இராவணேஸ்வரனின் அழிவிற்கு பின்புதான் இராகு, கேதுக்கள் உடைய பரிபாலனம் தொடங்கியது.  ஒரு மனிதனுடைய வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு ( நல்லபலன்கள் ஆனாலும் சரி! தீயபலன்கள் ஆனாலும் சரி!! ) இராகு திசை என்பது ஜாதகருக்கு மாற்றத்தை கொடுக்கக் கூடிய திசையாகஅமையும் என்பதில் சந்தேகமேயில்லை. 

பொதுவாக ராகு தசை நடப்பில் உள்ளவர்களுக்கு, உங்களை சுற்றி வீசக்கூடிய காற்று தென்றல் காற்றாக மாறி சிறிதேனும் இன்பத்தை தரக்கூடும். ஆனால் நாளடைவில் இந்த காற்று தென்றலாக தான் வீசுமா?அல்லது புயலாக மாறுமா?  

ஜாதகருடைய வாழ்க்கையை "சுழன்றடிக்குமா"?என்பதை உங்கள் சுய ஜாதகத்தில் "சனியின்" ( சனி பகவான் அமர்ந்த ஸ்தானத்தை)  நிலையை கொண்டு அறிந்து கொள்ள வேண்டும். 



Leave a Comment