ஆறாதாரத் தலங்கள் 


மூலாதாரத் (எருவாய் கருவாய்க்கு இடைப்பட்ட இடம்)
தலம்: (மண்) திருவாரூா் .

சுவாதிட்டானத் (அடி வயிறு சிறுநீா்ப்பை இருக்கும் இடம் );
தலம் (நீா்): திருவானைக்கா.

மணிபூரகத் (தொப்பூள் பகுதி):
தலம் (நெருப்பு); திருஅண்ணாமலை.

விசுத்தித்(கண்டம்) தலம்; திருக்காளத்தி.

அனாகத் (இதயம்)
தலம் ;(ஆகாயம்)- சிதம்பரம்.

ஆக்ஞா தலம் (ஆணைத்தலம்- புருவமத்தி); ஸ்ரீ காசியாகும்.

உயினங்கள் செயல்படுவதற்குப் பூமி மூலமாக இருப்பதால் பூமியை மூலாதாரத் தலமாகக் கொண்டுள்ளனா். சுவாமி பெயா் திருமூலட்டானா் என்பது குறிக்கத்தக்கது. அதேபோல் உலகம் முழுவதும் இயங்குவதற்கு ஆகாயம் ஆதாரமாக நிற்றலால் ஆகாயமும்  மூலாதாரம் எனப்படுகிறது.

அது பற்றியே சிதம்பரமும் ஒருவகையில் மூலாதாரத் தலமாகப் பேசப்படுகின்றது.  சுவாமி திருமூலநாதா் எனக் குறிக்கப்படுவதும் நினைக்கத்தக்கது. இதனால் சிதம்பரத் தலமும் நடராஜப் பெருமான் கூத்தும் உலக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

நடராஜப்பெருமான் ஆட்டம் இல்லையேல் உலக இயக்கமே இல்லை. அவருடைய ஆட்டமே உலகத்தை இயக்குகிறது. அணு அசைந்து கொண்டே இருக்கிறது என்ற விஞ்ஞான நுட்பமும் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.



Leave a Comment