ஆனி பௌர்ணமி விரதமும், வழிபாடு செய்வதால் என்ன பலன் கிடைக்கும்?


பெளர்ணமி வழிபாடு பல காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். பெளர்ணமி தினத்தில் சந்திரன் தனது பிரகாச ஒளியை பரிபூரணமாக வழங்குவதைப் போல, பெளர்ணமி விரத வழிபாடு பரிபூரண பலனைத் தரவல்லது.

பெளர்ணமி வழிபாடு:

பெளர்ணமி தினத்தில் எந்த தெய்வத்தை நினைத்து விரதமிருந்து வழிபட்டாலும் நாம் எதை நினைத்து வழிபடுகிறோமோ அது நிறைவேறும்.

அதன் காரணமாக தான் ஒவ்வொரு பெளர்ணமி தினத்தின் போது மக்கள் மலையடிவாரத்தில் உள்ள இறைவனை வணங்கி கிரிவலம் செல்லுதலும், நீர்நிலைகளில் சென்று வழிபடுதலும், கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த தினத்தில் விரதமிருந்து இறைவனை வழிபடுதலும், இரவில் சந்திர தரிசனம் செய்தலும் மிக அற்புதமான பலனைத் தரவல்லது. அறிவியல் ரீதியாக பார்த்தால், சூரியனின் ஒளியை உட்கிரகித்து ஒளிரக்கூடியது சந்திரன். மேலும் பூமியை சந்திரனும், சூரியனை பூமியும் சுற்று வருகின்றது.

பூமி தன்னை தானே சுற்றுதலும், பூமி சூரியனை சுற்றுதலால் பெளர்ணமி, அமாவாசை ஏற்படுகிறது. சூரியனின் ஒளியை முழுமையாக பெறக்கூடிய நாள் பெளர்ணமி என்றும், சூரிய ஒளி சந்திரனை அடையாத நாள் அமாவாசை ஆகும்.



Leave a Comment