முருகனுக்கு உருவமில்லாத கோயில் எங்குள்ளது தெரியுமா?


கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும். முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது. முருகனுக்கு உருவமில்லாத கோயில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

கந்தனுக்குரிய விரதங்கள்:
வார விரதம்,
நட்சத்திர விரதம்,
திதி விரதம்.

முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார். முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும். பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.
 



Leave a Comment