நவக்கிரக தோஷங்கள் போக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு....
ஆஞ்சநேயரது மிகவும் சிறப்புபெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ள . அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.
ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.ஆலவாயன் சிவனின் அம்சம்.
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில்மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்ட லட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.ஏழுமலையானின் அனுக்கிரகம்.
ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது . அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.
Leave a Comment