ராகு கிரகஸ்த சூரிய கிரகணம்.... என்ன பரிகாரம்?


ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும்.

இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில், வைகாசி 27ஆம் தேதி ஜூன் 10 ஆம் தேதி வியாழக்கிழமை, இந்திய நேரப்படி காலை 8:12.20 மணிக்கு தொடங்கி மதியம் 1:11:19 மணிக்குள் ராகு கிரகஸ்த பகுதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது.  காலை 10:41:54 மணிக்கு சூரிய கிரகணத்தின் உச்சநிலையாக இருக்கும்.  முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்திர கிரகணம் நிகழ்ந்தது வரும் 10ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

ராகு மறைக்கும்போது ராகு கிரஹஸ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது கிரஹஸ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. வரும் 10ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் ராகு உடன் சூரியன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது.
 



Leave a Comment