மஹாலக்ஷ்மியின் வாஹனமான ஆந்தை வழிபட்டால் நடக்கும் அதிசயங்கள்.....
பார்ப்பதற்கே அச்சுறுத்தலாக இருக்கும் ஆந்தையை பல்வேறு கோணங்களில் மக்கள் பார்க்கின்றனர். முந்தைய காலங்களில் ஆந்தையை மரணத்தின் அறிகுறியாக பார்த்து வந்தனர். ஆந்தையின் அலறல் சத்தம் கேட்டாலே அந்த ஊரில் யவரேனும் இறக்க நேரிடும் என்று அவர்கள் கருதினர். இதனால் சிலர் ஆந்தையை வெறுத்தனர்.
ஆந்தையை கண்டால் கல்லை கொண்டு எரிந்து விரட்டி அடித்தனர். அது மிகவும் தவறானது. ஆந்தையின் படம் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக மஹாலக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜாக்களின் அரண்மனையில் ஆந்தையின் படம் கண்டிப்பாக இருக்கும். அதை அதிர்ஷ்டத்தின் உருவமாக வழிபட்டனர்.
ஆந்தை சொந்தமாக கூடு கட்டுவதைவிட மற்ற பறவைகளின் ஆதரவற்ற கூட்டை அதிகம் விரும்புகின்றன. தேவி மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருப்பது ஆந்தை தான். வட இந்திய மக்கள் ஆந்தையை வாகனமாக கொண்ட லக்ஷ்மியை அதிகளவு வழிபாடு செய்கின்றனர்.
விவசாயிகளின் உற்ற நண்பனாக ஆந்தை கருதப்படுகிறது. வயல்களை சேதபடுத்தும் எலிகளை சாப்பிட்டு விவசாயத்திற்கு பெரிதும் உதவி செய்கின்ற ஆந்தையை அபசகுணமாக கருதவும் செய்கின்றனர். மஹா லஷ்மி ஸ்ரீமஹா விஷ்ணுவிற்கு வாகனமாக கருடன் உள்ளது போல் மஹா லக்ஷ்மிக்கென்று பிரத்யேகமாக ஆந்தை வாகனமாக இருக்கின்றது. இது பலரும் அறியாமல் இருக்கலாம்.
வட இந்திய மக்கள் தங்களின் வீட்டு கூரையில் ஆந்தை கூடு கட்டி அலறல் சத்தம் கொடுத்து கொண்டே இருந்தால் சுப சகுணமாக கருதுகின்றனர். சுபகாரியம் நடத்தவிருக்கும் வீட்டில் ஆந்தை சத்தம் கேட்டால் லக்ஷ்மியின் சம்மதம் கிடைத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுகின்றனர். வெளியில் கிளம்பும் போது ஆந்தையை காண நேர்ந்தால் உறுதியாக போகும் காரியம் அமோக வெற்றி தான் என்கின்றனர்.
தென்னிந்திய மக்களோ இதை அபசகுணமாக கூறுகின்றனர். வடக்கே ஆந்தை அலறினால் சுபமாகவும், மற்ற திசைகளில் ஆந்தை குரல் கேட்டால் அபசகுனம் என்றும் ஆருடம் பார்க்கின்றனர். ஆந்தையின் பார்வை திறன் அதிகம் என்பதால் அதனால் வெகு தொலைவில் இருக்கும் இரையை கூட தெள்ள தெளிவாக பார்க்க முடியும்.
இரவில் ஆந்தை அலறினால் சுப பலன்கள் கிட்டும் என்று நிச்சயமாக நம்புகின்றனர். எந்த வீட்டின் அருகே அமர்ந்து ஆந்தை அலறுகிறதோ அந்த வீட்டில் பொருளாதார நிலை உயருமாம். செல்வா வளமும் பெருகுமாம். கோவில் மரங்களில் இது போல் ஆந்தை அலறினால் அங்கிருக்கும் மக்களுக்கு நல்லது நடக்குமாம்.
ஆந்தை சத்தம் போடாமல் அமைதியாக இருந்தால் வேதனை படுவார்கள். ஆந்தை அலறும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்களும் கூறுகின்றனர். நவ கிரங்கங்களின் அடிப்படையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிக்கையில் ஆந்தை அலறும் பலன்கள் கூறப்படுகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த ஆந்தையாரை கிரக்கர்கள், ஐரோப்பிய மக்கள் அறிவின் கடவுளாக கருதுகின்றனர்.
ஆந்தை புத்திக் கூர்மையுள்ள பறவை என்றும் குறிப்பிடுகின்றனர். இரவின் அரசன், விவசாய நண்பன், மஹா லக்ஷ்மியின் வாகனம், செல்வம் தரும் பறவை என்று மக்களுக்கு நல்லதை செய்கின்ற ஆந்தையை அதன் விசித்திர முகம் காரணமாக வெறுப்பது சரியல்லவே.
Leave a Comment