இக்கட்டான நேரத்திலும் கைகொடுக்கும் பொறுமை.... 


காசி என்றாலே கங்கை தான் நினைவிற்கு வரும். காசியில் குரு ஒருவர் சிஷ்யனுக்கு பொறுமையாக இருக்க கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார். அந்த சிஷ்யனும் குருவிற்கு எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பொறுமையாக இருந்து பணிவிடை செய்தான்.

பல நாட்கள் கடந்தன குருவும் அந்த சிஷ்யனை ஆசிர்வதித்து எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் தான் பாத யாத்திரை செல்வதாக கூறி மீண்டும் வருவேன் என்றார் அதுவரை ஸ்ரீமந் நாராயணனை குறித்து நீ தவம் செய் என்றார். 

அந்த சிஷ்யனும் குருவின் ஆலோசனையை சிறம் மேற்கொண்டு ஸ்ரீமந் நாராயணனை குறித்து தவம் செய்தான். ஒவ்வொரு நாளும் கங்கையில் நீராடி தவம் செய்தான். இப்படி செய்தவனுக்கு ஒரு நாள் சோதனையும் வந்தது.

அங்கு மிகப்பெரும் படையுடன் வந்த மன்னன் ஒருவன் நீர் தாக மெடுத்ததால் கங்கை நீரை பருகி இளைப்பாறினான்.  அங்கு அந்த சிஷ்யன் தன்னையும் கவனிக்காமல் தவம் செய்ததை பார்த்த மன்னனுக்கு கோபம் வந்தது.

அவனருகில் சென்று சேற்றை வாரி இறைத்தான் மன்னன். அது கண்டு அவன் கங்கையில் நீராடி இறைவனை நினைத்து மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான். மீண்டும் மீண்டும் அவன் மேல் சேற்றை வாரி இறைத்தான் மன்னன்.

அது கண்டு மீண்டும் அவன் கங்கையில் நீராடி இறைவனை நினைத்து மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான். ஒரு கட்டத்தில் மன்னன் சோர்ந்தே விட்டான். மன்னன் அவனருகில் சென்று அப்பா நான் உன் மேல் நான் சேற்றை வாரி இறைத்தேனே உனக்கு கோபம் வரவில்லையா என்றார்.

அதற்கு அவனோ நான் ஒரு இளம் சன்னியாசி எனக்கு எதற்கு கோபம் வர வேண்டும். ஆம் உங்கள் மேல் எனக்கு துளியும் கோபம் இல்லை. நீங்கள் என்னை கங்கையில் மீண்டும் மீண்டும் நீராட வைத்து புனிதப் படுத்தி விட்டீர்கள்.

என் பொறுமையின் எல்லையை இறைவனால் நீங்கள் சோதித்தீர்கள் அவ்வளவு தான். நானோ பாக்கிய சாலி நன்றி மன்னா என்று சொல்லி மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான். மன்னனின் கர்வம் அடங்கியது

இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பொறுமையாக இருக்க இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று அந்த இளம் சன்னியாசியை நமஸ்கரித்து வாழ்த்தி விடை பெற்றார். 

நீதி, சன்னியாசி நினைத்திருந்தால் மன்னனை அவமதித்து இருக்கலாமே, அதனால்  அப்படி செய்தால் அது அவனுக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். எவ்வளவு இக் கட்டான நேரத்திலும் பொறுமையை கையாண்டால் உலகையே வென்று விடலாம்.
 



Leave a Comment