கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் 


கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது. கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் அவர்களின் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் சொரிந்தால், அந்த இடத்தில் குழந்தைக்கு கருப்பாக அல்லது ஏதேனும் அடையாளம் தோன்றும் என கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் கண்டிப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல் கூடாது. வீட்டை சுத்தம் செய்தல், கூடாது.

கிரகண நாளிலாவது கிரகணத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட வேண்டும். கிரகண நேரத்தில் நம் வயிற்றில் உள்ள உணவு நன்றாக செரித்து முடிந்த நிலையில் இருப்பது நல்லது.

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் :

கிரகணம் முடிந்ததும் ஐயர்களை அழைத்து பரிகாரம் செய்யலாம். அப்படி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கிரகணம் முடிந்த பின், வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் நன்றாக சுத்தமான பின்னர் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வணங்கவும்.

கிரகணம் முடிந்த பின்னர் பொதுவாக நம் முன்னோர்கள் கடலில் குளிக்க வேண்டும் என்பார்கள். அல்லது நம் வீட்டிலேயே குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு போட்டு அந்த தண்ணீரில் குளிப்பதால் நம்மை சுற்றியுள்ள தீவினைகள் நீங்கும். அதே போல் நம் உடலில் உள்ள நுண் கிருமிகள் மடியும்...



Leave a Comment