சந்திர கிரகணத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்.... 


26 மே அன்று 101.6 சதவீதம் என முழு கிரகணமாக நடக்கும் இந்த நிகழ்வு மதியம் 2.17 மணிக்கு தொடங்கி இருக்கிறது. இரவு 7.19 மணி வரை என 5 மணிநேரம் 2 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. கிரகணம் குறித்து நல்ல மற்றும் மோசமான நிகழ்வுகள் குறித்து பல சாஸ்திர நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சந்திர கிரகணம் எந்த நட்சத்திரத்தில் ஏற்படுகிறது?

சந்திர கிரகணம் எப்போதும் பெளர்ணமி நாளில் ஏற்படும். அதாவது சூரியன் மற்றும் சந்திர ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் - சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் நாம் சந்திர கிரகணமாக காண்கிறோம்.

இந்த கிரகணம் மதியம் 2.17 மணிக்கு தொடங்கியுள்ளது. அதாவது குரு அதிபதியாக கொண்ட விசாகம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

​பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரங்கள் :

துலாம் மற்றும் விருச்சிக ராசியில் இருக்கும் குருவை அதிபதியாக கொண்ட விசாக நட்சத்திரத்தில் இந்த சந்திர கிரகண நிகழ்வு நடைபெறுகிறது. அதனால், 

விசாகம் நட்சத்திர (பாதம் 1,2,3) - துலாம் ராசி

விசாகம் நட்சத்திர (பாதம் 4) - விருச்சிகம் ராசி

புனர்பூசம் (பாதம் 1,2, 3) - மிதுனம் ராசி

புனர்பூசம் (பாதம் 4) - கடகம் ராசி

பூரட்டாதி நட்சத்திர (பாதம் 1,2,3) - கும்பம் ராசி

பூரட்டாதி நட்சத்திர (பாதம் 4) - மீனம் ராசி

அதுமட்டுமல்லாம் குரு ஆளக்கூடிய தனுசு மற்றும் மீன ராசியினர் இந்த சந்திர கிரகண நிகழ்வால் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும். 

யோகத்தை அதிகளவில் தரக் கூடியது என்பதால் இந்த நேரத்தில் நம் இறைவனின் திருநாமத்தை ஜெபித்து வந்தால் நம் பாவங்கள் நீங்கப்பெறும்.

காயத்ரி மந்திரம் சொல்லலாம்

ஓம் பூர்: புவ: ஸுவ: 
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய 
தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!

இல்லை என்றால் “ஓம் நமோ நாராயணா”, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா என்ற எளிய மந்திரங்களை உச்சரித்து உங்களின் பாவங்களை தொலைக்கலாம்.



Leave a Comment