அதிக சக்தி வாய்ந்த ஸ்ரீபஞ்சமுக  ஆஞ்சநேயர் மந்திரம் 


அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக் கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும்.  வராக முகம் செல்வம் அளிக்கும். 

அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும். 

பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடி வில் ஒருங்கிணைந்து உள்ளார்.

கிழக்கு முகம்

ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம்......

கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.......

 "ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா" 

தெற்கு முகம்

நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் 

பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்...

கீழ்கண்ட  ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்.

"ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய 
தக்ஷண முகேகரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா"

மேற்கு முகம்

கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்......கீழ் கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்...

"ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா" 

வடக்கு முகம்

வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் ஆகியவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும்.....
கீழ்கண்ட  ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.....

"ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா". 

மேல் முகம்

ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

"ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா".
 



Leave a Comment