ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு உகந்த விபூதி.... எந்த திசை பார்த்துவிபூதி பூச வேண்டும் ?
திரு என்றால் மகா லக்ஷ்மி. விபூதியை திருநீறு என்று அழைக்கிறார்கள் .
விபூதியை எந்த திசை பார்த்து பூச வேண்டும் ?
நீரில்லா நெற்றி பாழ் ‘என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. சைவர் திருநீறும் ,வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில் இருக்க வேண்டும் . வடக்கு திசை ,கிழக்கு திசை நோக்கி நின்று கீழே சிந்தாமல் ,மூன்று விரல்களால் (நடு விரல் , மோதிர விரல் ,ஆள் காட்டி விரல் )பூச வேண்டும் .
விபூதி நிலத்தில் சிந்துவது பாவம். பூசும் போது சிவாய நம அல்லது சிவ சிவ ஓம் நமசிவாய என்றும் உதடு பிரியாமல் மனம் ஒன்றி சொல்ல வேண்டும் . திருமணமாகாத பெண்கள் விபூதி பிரசாதத்தை கழுத்தில் பூச வேண்டும். இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும் .
எப்போது விபூதி பூசலாம் ?
காலை, மாலை ,பூஜைக்கு முன்னும் ,பின்னும் ,ஆலயம் செல்வதற்கு முன் ,இரவில் உறங்க போவதற்கு முன் ,விபூதி தரிக்க வேண்டும் . மூன்று படுக்கை வசக் கோடு பூசுவதை “திரிபுண்டரம் “எனப்படும் .
Leave a Comment