குங்குமம் வைக்கும்போது பெண்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் வைக்க சிறந்த திசை எவை என கூறப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் குங்குமத்தை சுமங்கலி பெண்கள், கிழக்கு நோக்கி நின்று கொண்டு
ஸ்ரீம் ஸ்ரீயை நம; ஸம் சுபம் பூயாத்,
எனும் லட்சுமி மந்திரத்தை கூறி, தன்னுடைய புருவ மத்தியில் குங்குமத்தை வைக்க வேண்டும். இதனால் சுமங்கலி பெண்களின் வாழ்க்கையில் லஷ்மி கடாஷம் உண்டாகி, திருஷ்டி தோஷம் நீங்கும்.
நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால், தனிப்பலன் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம். காரணம் சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் மற்றும் விட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.
ஒரு 40 வருடங்களுக்கு முன்பு ஆண்களும் பெண்களும் பெரிய பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவ்வளவு ஏன் மிராசுதார் கூட நெற்றியில் குங்குமம் பெரிதாக வைத்து கொள்ளும் பழக்கம் இருந்தது. ஏன் இன்றும் கூட சிலர் நெற்றியில் குங்குமம் பெரியதாக இட்டு கொள்கின்றனர்.
பெருமாள் சிவன் கோவிலில் குங்குமம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல கூடாது. அப்படி செய்தால் மஹாலக்ஷ்மியின் அருள் உங்களுக்கு கிடைக்காது. அதேபோல் குங்குமம் அரக்கு நிறத்தில் காணப்படும் குங்குமமே மிகவும் சக்தி வாய்ந்தது.
Leave a Comment