ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடான பாஞ்சஜன்யம் சங்கு  மகிமைகள்


பாஞ்சஜன்யம் - சங்கு 

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே!  

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால் அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.


கௌமோதகம் - கதை 

ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம் வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 

பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.

நந்தகம் - வாள் 
ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடைகிறேன்.

சார்ங்கம் - வில்  
யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 

தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணமடைகிறேன்.
 



Leave a Comment