பெண்கள் எந்த விரலால் குங்குமம் வைக்க வேண்டும்....?


திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் வைப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
 
கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
 
சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக்  கட்டுபாட்டிற்கு நல்லது. குங்குமத்தை நெற்றியில் வைப்பதால், நெற்றியின் புருவத்தில் உள்ள நுண்ணிய பகுதியில், நம் உடலில் உள்ள மின்காந்த  சக்திகள் அதிகமாக வெளிப்படுகிறது. 

அந்த சக்தியானது, நம் உடலில் உஷ்ணம் காரணமாக ஏற்படும் தலைக்கனம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை தடுத்து, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் நம் உடலின் மனோசக்தி  அதிகரித்து, நம்முடைய முகம் பிரகாசமாக இருக்க உதவுகிறது.



Leave a Comment