திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின் யாரை தரிசிக்க வேண்டும்....?


பெருமாளை தரிசனம் செய்து  வெளியே வந்தால் முதலில்பிறகு விஸ்வக்சேனர் சன்னதி உள்ளது அவரை தரிசனம் செய்ய வேண்டும். பெருமாள் கோவில் வரவு செலவு பூஜை எல்லாம் கவனிப்பவர் இவரே பெருமாளுக்கு போட்ட மாலை இவருக்கு தான் முதலில் போடுவார்கள்.

திருப்பதி  முலவரின் அமைப்பு படி இருக்கும் பெருமாள் அனந்த விமானத்தில்   காட்சி தரும் பெருமாளை  வணங்கி வேண்டும் இவர் வடக்கு நோக்கி காட்சி தருகிறார் .  இவரை தரிசனம் செய்தால் வைகுண்ட ஏகாதசி பெருமாள் தரிசனம் செய்த பலன் உண்டு

பொதுவாக வடக்கு நோக்கிய அமைப்பு எல்லாமே நலமே வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது என்று சொல் காரணம் விழித்த உடன் தெற்கு திசை  பார்க்க வேண்டும் என்பதால் தான்.

விஞ்ஞான ரீதியாக வடதிசை காந்த சக்தி அதிகம் அதனால் தலை வைக்க வேண்டாம் என்று சொல்வார்கள்  இதில் ஒன்று யோசிக்க வேண்டும் வட  தென்  திசை நோக்கி  சொல்லும் கோடுகள்   பற்றி படம் பார்த்து இருக்கிறோம்.  வடக்கு தெற்கு இருபுறமும் சீரான கோடுகள் இருக்கும். வடக்கு திசையில் இருக்கும் அதே கோடுகள் தெற்கிலும் தான் இருக்கும்.  வடக்கில் தலை வைத்தால் விழிக்கும் போது தென் திசையை பார்க்கும் படி இருக்கும் என்பதால் வடக்கை தவிர்க்க வேண்டும் என  சொல்லி இருக்கிறார்கள் முன்னோர்கள். 

வடக்கு என்று எழுதினால் வ என்ற எழுத்து முடிவு மேல்நோக்கி செல்லும் கிழக்கு என்ற எழுத்து முடிவு  கிழக்கு நோக்கி செல்லும்  தெற்கு என்ற எழுத்து  முடிவு தென் திசை நோக்கி சொல்லும் மேற்கு என்ற  எழுத்து முடிவு மேற்கு நோக்கி சொல்லும் . 

சுற்றி வரும் போது கோபுரத்தின் நேராக சுற்று மண்டபத்தின் இரண்டு படி ஏறினால் இந்த கோபுர ஸ்ரீநிவாசர் தரிசனம் செய்தால் தான் பெருமாளை தரிசித்த  பலன் கிடைக்கும்.

அங்கிருந்து காகாளம் என்ற  உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு கோவில் வடகிழக்கு பகுதியில் உள்ள யோக நரசிம்மர் தரிசனம் செய்யலாம். பலர் அந்த பக்கமே திரும்பாமல் போவார்கள்   திருப்பதி பயணத்தில் முக்கிய அம்சமே அந்த வடகிழக்கு பகுதி  தரிசனம் தான் அதை யாரும் பொருட்டாக மதிப்பதில்லை . 

யோக நரசிம்மரை தரிசனம் செய்து அதன் சுற்று பகுதியில் சுற்றும் போது  மொத்த கோவிலின் ஈசான்ய பகுதி இதுவே இந்த இடத்தில் ஒரு தூண் உள்ளது. அதுதான் மொத்த கோவில் கட்டும் போது முதல்  முதல் நடந்த இடம் இந்த இடத்தில் உள்ள தூண் முழுவதும் மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்து இருப்பார்கள் . அப்படியே வெளியே வந்தால் ஒரு நீண்ட கல் பலகை இருக்கும் அதில்  விரலால் உங்கள் விண்ணப்பத்தை எழுதி விட்டு வரலாம்.
 



Leave a Comment