ஜீவ பஸ்பம் திருநீறு.... போகர் சித்தர் ஆசிர்வாத்த ரகசிய முறை
நமது நாட்டில் பெரும்பாலும் சாமியார்கள் அவர்களை பார்க்க சென்றால் விபூதி வழங்குவது வழக்கம். சிறிது வாயில் போட்டு விட்டு சிறிது நெற்றியில் இட்டு விடுவார்கள். அது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும். சரி வெறும் விபூதி மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்று சந்தேங்கம் தோன்றுவது இயல்பு தான்.
இவை வெறும் சித்து மட்டும் இல்லை இவை மருத்துவ குணம் வாய்ந்தது. சிலர் சிறுநீரகத்தில் கல் இருந்தது அவர் கொடுத்த விபூதி மூன்று நாள் சாப்பிட சொன்னார் ஸ்கேன் செய்து பார்த்தும் கல் இல்லை என்று சொல்லி வியப்படைவதை பார்த்து இருக்கிறோம்.
இன்னும் சிலர் கை கால் தீராத வலி இருந்தது அந்த மகான் மந்திரித்து கொடுத்த விபூதி ஒருவாரத்தில் சரி செய்தது என்று சொல்ல கேட்டு இருக்கோம். இன்னும் சிலர் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி போன்று அவதியில் இருந்தேன் தினமும் அந்த சாமியார் கொடுத்த விபூதி சாப்பிட்டேன் முழுமையாக குணமாகி விட்டது என்று கேள்விப் பட்டு இருக்கோம்.
சிலர் சொறி, சிறங்கு போன்றவற்றால் அவதி பட்டு இந்த விபூதியை அதன் மீது போட்டும் விபூதியை உண்டும் குணமானதை கண்டு இருக்கோம். இவை அனைத்தும் நிதர்சனமான உண்மை தான்.
ஜீவ பஸ்பம் திருநீறு செய்முறை...
படிகார பஸ்பம் - 10 கிராம்
கல் நார் பஸ்பம் - 10 கிராம்
குங்கிலிய பஸ்பம் - 10 கிராம்
நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம்
ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம்
பவள பஸ்பம் - 10 கிராம்
சங்கு பஸ்பம் - 10 கிராம்
சிலா சத்து பஸ்பம் - 10 கிராம்
சிருங்கி பஸ்பம் - 10 கிராம்
முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம்
நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் -
மேலுள்ள 11 பற்பங்களையும் கலந்து அதை ஒரு விபூதியுடம் கலந்து வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டியது தான். சிலர் கோயிலில் சாமியார் போல் உட்கார்ந்து வரும் நபருக்கு வெறும் விபூதியை இட்டுவிட்டு, கலந்து வைத்திருக்கும் பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால், அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும். இதை சித்து என்றும் சொல்லலாம் மருந்து என்றும் சொல்லலாம். இந்த திருநீறு பிரயோகம் மூலம் அதன்மூலம் பயன் பெற்றவர்கள் ஏராளம்.
Leave a Comment