பணக்கஷ்டம் தீர்க்கும் கோ பூஜை
உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது. வீட்டில் பசு இல்லாதவர்கள் அன்றாடம் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம் புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக் கீரையோ, பிறதீவனமோ கொடுக்க வேண்டும்.
எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.
கோ பூஜை செய்வதால் பணக்கஷ்டம் தீரும். மணப்பேரும் மழலை வரமும் கிடைக்கும். பசுவை பூஜிக்கும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது. முன்னோர் ஆசி சேரும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும்.
மனக்குறையும் உடல் பிணிகளும் விலகும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.சுருக்கமாக சொன்னால் கோமாதாவை வணங்குவதால் கிடைக்காத நற்பலன் எதுவுமே இல்லை.
பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வம்சமாகவே இன்று உலகில் உள்ள எல்லா பசுக்களும் உள்ளன
ஒருவராகவோ பலர் சேர்ந்தோ இந்த பூஜை செய்யலாம். கோயிலில் அல்லது வீட்டில் நடத்தலாம். பொதுவானதோர் புனித இடத்தில் பலர் கூடி செய்யலாம். எப்படி செய்தாலும் பலன் நிச்சயம். வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் பசுவுக்கு பூஜைசெய்யலாம். தொடர்ந்து ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொரு வாரம் அல்லது மாதம் செய்வது நற்பலனை அதிகரித்து குடும்பத்தில் சுபிட்சம் நிலவச் செய்யும்.
பசு தானம் மிக சிறப்பிக்கப்படுகிறது. ஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நக்ஷத்திரத்திலும் கோதானம் செய்வதும், கோபூஜை செய்வதும் மேன்மை தரும் பசுதானம் செய்பவர்களுக்கு கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும். கோயில்களில் கோசாலை கோசாலை உள்ள கோவில்களுக்கு பால் கறக்கும் பசுவையும் கன்றினையும் அளித்தால் கோடி புண்ணியம் கிட்டுவதுடன், அவர்களது வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும். பசுவையும் கன்றையும் ஓராண்டு பராமரிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதும் சாலச் சிறந்தது.
Leave a Comment