நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!


குங்குமம் வைத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்களை பார்ப்பதற்கு முன், குங்குமம் எப்படி தயாராகிறது என்பதை பார்ப்போம்.

படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்துதான் குங்குமம் செய்ய வேண்டும். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச்சத்தாக மாறிவிடும். படிகாரம், கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. தொற்று நோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கும், உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதால் அபாரமான சக்தி கிடைக்கிறது.

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு ஷேமத்தைக் கொடுக்கும்.சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமஹா லட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
 
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். இதனால் கணவனின் ஆயுள் அதிகரிக்கும். குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். 

குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது மிக மிக கடினம். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
 
அரக்கு நிற குங்குமம் லஷ்மி நாராயணனை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
 



Leave a Comment